செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் வீரர் சவுரப் அசத்தல்

Published On 2018-08-21 05:50 GMT   |   Update On 2018-08-21 05:50 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு வீரர் அபிஷேக் வெண்கலம் வென்றார். #AsianGames #SaurabhChaudhary
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

இதற்கான தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி மொத்தம் 586 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்து, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேபோல் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா 580 புள்ளிகளுடன் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.



அதன்பின்னர் இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட சவுரப்  (வயது 16) தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இப்போட்டியில் சவுரப் 240.7 புள்ளிகள் எடுத்து புதிய சாதனையும் படைத்துள்ளார். அபிஷேக் 219.3 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். ஜப்பான் வீரர் மத்சுடா டொமோயுகி 239.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SaurabhChaudhary
Tags:    

Similar News