செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானர் - பிரதமர், கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்

Published On 2018-08-15 19:14 GMT   |   Update On 2018-08-15 19:43 GMT
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மும்பையில் காலமானார், இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #AjitWadekar
மும்பை :

இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை தேடி தந்தவர் அஜித் வடேகர்(77). பட்டோடிக்கு பிறகு 1970-களில் இந்திய அணியின் கேப்டனாக பொறுபேற்ற வடேகர் அணியை திறம்பட வழிநடத்தி சென்றதோடு அல்லாமல் சிறந்த இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்லிப் பீல்டராகவும் வலம் வந்தவர்.

1964-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 14 அரை சதங்களுடன் 2113 ரன்களை குவித்துள்ளார். 1974-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர், மேனேஜர், தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வடேகர் வகித்துள்ளார். இந்தியாவின் நான்காவது உயரிய விருதன பத்மஸ்ரீ விருது, அர்ஜூனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகளை அஜித் வடேகர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று(ஆகஸ்ட் 15) காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் அறிமுகமான பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முதல் கேப்டனாக இருந்த பெருமைக்குறியவர் அஜித் வடேகர். 3-ம் நிலை வீரராக களமிறங்கும் இவர் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தும் வீரராக அறியப்பட்டார்.

1971-ம் ஆண்டுகளில் பலம் பொருந்திய அணிகளாக  திகழ்ந்த இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது நிகழ்வுகள் இந்திய அணியின் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றிகளாக இன்றளவும் கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #AjitWadekar
Tags:    

Similar News