செய்திகள்

1962-ல் இருந்து எட்ஜ்பாஸ்டனில் வெற்றி பெற முடியாமல் தவிக்கும் ஆசிய அணிகள்

Published On 2018-08-05 15:10 GMT   |   Update On 2018-08-05 15:10 GMT
இந்தியா தோல்வியால் எட்ஜ்பாஸ்டனில் கடந்த 1962-ல் இருந்து 17 போட்டிகளில் ஆசிய அணிகள் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. #ENGvIND
ஆசிய கிரிக்கெட் அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேச அணிகள் வெளிநாட்டு மண்ணில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. மேலும் குறிப்பிட்ட சில மைதானங்களில் வெற்றியை ருசித்ததே கிடையாது.

நேற்று எட்ஜ்பாஸ்டனில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததன் மூலம் 1962-ல் இருந்து தற்போது வரை 17 போட்டிகளில் ஆசிய அணி வெற்றி பெறாமல் தவித்து வருகிறது. இதுதான் தொடர்ச்சியாக ஆசிய அணிகள் வெற்றி பெற முடியாத அதிக எண்ணிக்கையாகும்.



அதன்பின் லார்ட்சில் 1932 முதல் 1982 வரை 16 போட்டிகளில் வெற்றி பெறாமல் இருந்தது. அதேபோல் 1953 முதல் 2017 வரை கென்னிங்டன் ஓவரில் 16 போட்டிகளில் வெற்றியை ருசிக்க முடியாமல் இருந்துள்ளது.

1983-ல் இருந்து 2017 வரை மெல்போர்ன் கிரிக்கெட் மைானத்திலும், 1953 முதல் 2004 வரை சபினா பார்க் மைதானத்தில் 13 போட்டிகளிலும், 2001 முதல் 2014 வரை லார்ட்ஸில் 13 போட்டிகளிலும், 1947-ல் இருந்து தற்போது வரை 13 போட்டிகளில் பிரிஸ்பேனிலும் வெற்றி பெற முடியாமல் இருக்கிறது.
Tags:    

Similar News