செய்திகள்

இங்கிலாந்து கால்பந்து அணி பயிற்சியாளருக்கு 5 மில்லியன் பவுண்டா- விமர்சனம் செய்கிறார் நெட்பால் கோச்

Published On 2018-07-27 14:15 GMT   |   Update On 2018-07-27 14:15 GMT
இங்கிலாந்து கால்பந்து அணி பயிற்சியாளருக்கு 5 மில்லியன் பவுண்டு சம்பளம் வழங்க இருப்பதை பெண்கள் நெட்பால் பயிற்சியாளர் விமர்சித்துள்ளார். #GarethSouthgate
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் மாதம் 14-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரை ரஷியாவில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறியது. அரையிறுதியில் குரோசியாவிடம் தோல்வியடைந்தது.

கால்பந்து தொடர் தொடங்கும்போது இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடும் என யாரும் கணிக்கவில்லை. ஆனால் அரையிறுதி வரை முன்னேறியது. இதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் காரேத் சவுத்கேட் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.



அவர் பணியை பாராட்டி ஆண்டு வருமானத்தை 5 மில்லியன் பவுண்டாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பெண்கள் நெட்பால் அணி பயிற்சியாளருக்கு குறைந்த சம்பளமும், முன்னணி அணிகளை வெல்ல முடியாத இங்கிலாந்து அணியின் பயிற்சியருக்கு அதிக சம்பளம் கொடுப்பதை நெட்பால் பயிற்சியாளர் டிராகெய் நெவில் விமர்சனம் செய்துள்ளார்.

நெவில் மாதத்திற்கு 742 பவுண்டுகள்தான் சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News