செய்திகள்

தென் இந்திய கல்லூரி கூடைப்பந்து- கேரளா அணி சாம்பியன்

Published On 2018-07-24 12:35 IST   |   Update On 2018-07-24 12:35:00 IST
தென் இந்திய அழைப்பு கல்லூரி கூடைப்பந்து போட்டியில் கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த எஸ்.பி. கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. #SouthIndianCollegeBasketball
சென்னை:

மகேந்திரன் நினைவு விளையாட்டு கிளப் சார்பில் ஐ.எம்.ஏ. ஜூவல்ஸ் நிறுவன ஆதரவுடன் கே.விஸ்வநாதன் நினைவு கோப்பைக்கான தென் இந்திய அழைப்பு கல்லூரி கூடைப்பந்து போட்டி நுங்கம்பாக்கம் மாநகராட்சி திடலில் நடந்தது.

இதில் கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த எஸ்.பி. கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் 74-66 என்ற கணக்கில் ஜெயின் பல்கலைக்கழகத்தை (பெங்களூர்) வீழ்த்தியது. லயோலா கல்லூரி 2-வது இடத்தையும் ஜெயின் பல்கலைக்கழகம் 3-வது இடத்தையும், எம்.சி.சி. 4-வது இடத்தையும் பிடித்தன.

ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி முதன்மை கமி‌ஷனர் சி.பி.ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். முன்னார் சர்வதேச வீரர் குலாம் அப்பாஸ், போட்டி அமைப்பாளர் எஸ்.எஸ்.நிசார் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர். #SouthIndianCollegeBasketball
Tags:    

Similar News