செய்திகள்

ஜெர்மனி வீரர் மெசுட் ஒசில் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு

Published On 2018-07-23 10:54 GMT   |   Update On 2018-07-23 10:54 GMT
ஜெர்மனி கால்பந்து அணியின் அட்டக்கிங் மிட்பீல்டரான மெசுட் ஒசில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #MesutOzil
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றோடு வெளியேறிது.

இதனால் ஜெர்மனி வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழும்பியது. குறிப்பாக 29 வயதாகும் மெசுட் ஒசில் மீது வார்த்தை தாக்குதல் நடத்தப்பட்டது. மெசுல் ஒசிலின் பூர்விகம் துருக்கியாகும். கடந்த மே மாதம் அவர் துருக்கி அதிபரை சந்தித்திருந்தார். இதுகுறித்த படத்தை வெளியிட்டு, ஜெர்மனிக்கு விசுவாசமாக ஒசில் விளையாடினாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டகப்பட்டது.



இந்நிலையில் தன்மீது இனவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும், அவமதிப்பு செய்ததாகவும் உணர்கிறேன். இதனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அர்செனல் அணிக்காக விளையாடும் மெசுட் ஒசில் 2009-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வரை 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2013ல் இருந்து அர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார்.
Tags:    

Similar News