செய்திகள்

ஜிம்பாப்வேயை 155-ல் சுருட்டி 244 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

Published On 2018-07-20 14:54 GMT   |   Update On 2018-07-20 14:54 GMT
4-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 155-ல் சுருட்டி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ZIMvPAK #FakharZaman
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக் 113 ரன்களும், பகர் சமான் 210 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ஓவரில் 304 ரன்கள் குவித்தது.

பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 155 ரன்னில் சுருண்டது.



இந்த அணியின் டொனால்டு டிரிபானோ அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார். சிகும்புரா 37 ரன்களும், பீட்டர் மூர் 20 ரன்களும், மசகட்சா 22 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சாரபில் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 4-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #ZIMvPAK #FakharZaman #ShadabKhan #ImamulHaq
Tags:    

Similar News