செய்திகள்

கவானி இல்லாததே தோல்விக்கு காரணம்- சுவாரஸ் சொல்கிறார்

Published On 2018-07-07 20:08 IST   |   Update On 2018-07-07 20:08:00 IST
கவானி இல்லாததே பிரான்ஸ்க்கு எதிராக 0-2 எனத் தோல்வியடைய காரணம் என்று உருகுவே ஸ்டிரைக்கர் லூயிஸ் சுவாரஸ் தெரிவித்துள்ளார். #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் பிரான்ஸ் 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. நாக்அவுட் சுற்றில் உருகுவே போர்ச்சுக்கல் அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் உருகுவேயின் முன்னணி ஸ்டிரைக்கரான எடின்சன் கவானி. இவர்தான் இரண்டு கோல்களையும் அடித்தார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக போர்ச்சுக்கல் ஆட்டத்தின்போது கவானிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது பாதி நேரத்தின் பின்பகுதியில் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். நேற்றைய ஆட்டத்தில் உருகுவே லூயிஸ் சுவாரஸை மட்டுமே நம்பி களம் இறங்கியது. அந்த அணிக்கு ஏராளமான வாய்ப்பு கிடைத்தும் வெற்றிகரமாக பினிஸ் செய்ய இயலவில்லை.



பிரான்ஸ், உருகுவே அணிகள் 11 முறை கோல் அடிக்க முயற்சி செய்தனர். அதில் உருகுவே நான்கு முறை ஆன்-டார்கெட் நோக்கி முயற்சி செய்தது. ஆனால், பிரான்ஸ் 2 முறைதான் ஆன்-டார்கெட் செய்தது. உருகுவேயிற்கு நான்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இருந்தும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

ஒருநபரால் ஒன்றும் செய்ய இயலாத சுவாரஸ், கவானி இல்லாததே தோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News