செய்திகள்

தெண்டுல்கர் மகன் எனக்கு மற்றொரு வீரர் போன்றவர்தான்- U19 பந்து வீச்சு பயிற்சியாளர்

Published On 2018-06-19 12:33 GMT   |   Update On 2018-06-19 12:33 GMT
சச்சின் தெண்டுல்கர் மகன் என்பதால் அர்ஜூனுக்கு தனிப்பட்ட முறையில் விஷேச கவனிப்பு இருக்காது என U19 பவுலிங் கோச்சர் தெரிவித்துள்ளார். #ArjunTendulkar
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர், சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை பதிவு செய்துள்ளார். மேலும் டெஸ்டிலும் ஒருநாள் போட்டியிலும் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற முத்திரையை பதிவு செய்துள்ளார்.

இவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், நடுகள பேட்ஸ்மேனும் ஆவார். இவர் முதன்முறையாக 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சனத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின் தெண்டுல்கரின் மகன் என்பதற்காக அர்ஜூன் விஷேசமாக பார்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு எல்லா வீரர்களும் ஒரே மாதிரிதான் என்று தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து சனத் குமார் கூறுகையில் ‘‘பயிற்சியாளர் பதவியில் எனது வேலை என்ன என்பது எனக்கு முழுவதுமாக தெரியவில்லை. ஆனால், ஒரு பயிற்சியாளராக அனைத்து வீரர்களும் எனக்கு ஒன்றுதான்.

அர்ஜூன் தெண்டுல்கர் மற்ற இளைஞர்களைவிட மாறுபட்டவர் இல்லை. என்னுடைய வேலை ஒவ்வொரு வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான்’’ என்றார்.
Tags:    

Similar News