செய்திகள்

உலக அளவில் விராட் கோலிக்கு 83-வது இடம்

Published On 2018-06-06 10:53 IST   |   Update On 2018-06-06 10:53:00 IST
விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 83-வது இடத்தை பிடித்துள்ளார். #ViratKohli
நியூயார்க்:

விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலை பிரபல போபர்ஸ் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலக அளவில் 83-வது இடத்தில் உள்ளார். அவர் ஆண்டுக்கு ரூ.160.95 கோடி சம்பாதிக்கிறார்.

சமீபத்தில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பளத்தை உயர்த்தி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார்.

போபர்ஸ் வெளியிட்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிரபல குத்துச்சண்டை வீரரான மேவெதர் பிடித்துள்ளார். அவர் கடந்த ஆண்டு ரூ.1,900 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில் பிரபல கால்பந்து வீரர்களான ரொனால்டோ, மெஸ்சி, கூடைப்பந்து வீரர் லீபீரன் ஜேம்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இப்பட்டியலில் பெண் வீராங்கனைகள் யாரும் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்த செரீனா வில்லியம்ஸ், ‌ஷரபாவா ஆகியோர் இப்பட்டியலுக்குள் வரவில்லை.  #ViratKohli
Tags:    

Similar News