செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சஞ்ஜிதா பானு ஊக்கமருந்து சோதனையில் தோல்வி

Published On 2018-05-31 14:49 GMT   |   Update On 2018-05-31 14:49 GMT
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சஞ்ஜிதா பானு ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதனால் பதக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் கடந்த மாதம் காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட குமுக்சம் சஞ்ஜிதா சானு தங்கப் பதக்கம் வென்றார்.

போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைகளுக்காக மாதிரி எடுத்து வைப்பது வழக்கம். அப்படி எடுக்கப்பட்ட சஞ்ஜிதா சானு மாதிரியில் தடைசெய்யப்பட்ட அனபோலிக் ஸ்டீராய்டு என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.



இதை சர்வதேச பளுதூக்குதல் பெடரேசன் தெரிவித்துள்ளது. அனபோலிக் ஸ்டீராய்டு என்பது தசையை வளர்ச்சி அடைய வைக்கும் ஒருவகை ஊக்கமருந்து.
Tags:    

Similar News