செய்திகள்

17 வயதே ஆன ஆப்கன் வீரர் முஜீப் உர் ரஹ்மான் ஹம்ப்ஷைர் அணியுடன் ஒப்பந்தம்

Published On 2018-05-18 16:01 IST   |   Update On 2018-05-18 16:01:00 IST
ஆப்கானிஸ்தானின் 17 வயதே ஆன மாயாஜால பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான் கவுன்டி அணியான ஹம்ப்ஷைர் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Mujeeb
ஆப்கானிஸ்தானின் 17 வயதே ஆன மாயாஜால சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான், நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இதனால் ஐபிஎல் தொடர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கோடிகள் கொடுத்து அவரை வளைத்துப்போட்டது.

கோடிக்கணக்கில் தனக்கு கொடுத்த பணத்திற்கு அவர் ஏமாற்றம் அளிக்கவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.



இந்நிலையில் இங்கிலாந்து கவுன்டி அணியான ஹம்ப்ஷைர் முஜீப் உர் ரஹ்மான் ஒப்பந்நம் செய்துள்ளது. ஹம்ப்ஷைர் அணியில் நியூசிலாந்து வீரர் கொலின் முன்றோ இடம்பிடித்துள்ளார். இவர் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆகஸ்ட் மாதம் விளையாட இருக்கிறார். இதனால் முஜீப் உர் ரஹ்மானை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆஃப்-பிரேக்ஸ், லெக்-ஸ்பின் கூக்ளி என மாறுபட்ட பந்துகளை வீசும் இவர், 15 ஒருநாள் போட்டியில் 35 விக்கெட்டுக்களும், இரண்டு டி20 போட்டியில் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.
Tags:    

Similar News