ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 4-வது ஆட்டம்- ஐதராபாத் அணிக்கு 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

Published On 2018-04-09 22:06 IST   |   Update On 2018-04-09 22:06:00 IST
ஐபிஎல் 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 126 ரன்களை இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. #IPL2018 #SRHvRR #RRvSRH #VivoIPL

ஐதராபாத்:

ஐபிஎல் 11-வது சீசனின் 4-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அஜிங்கியா ரகானே, டார்கி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். ஷார்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதன்பின் சஞ்சு சாம்சன், ரகானே உடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். 13 ரன்கள் எடுத்த ரகானே ஆட்டமிழந்தார்.



அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்க தவறினர். சஞ்சு சாம்சன் மட்டும் நிதானமாக விளையாடி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 17 ரன்களும், ஷ்ரேயாஸ் கோபால் 18 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணி பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன், சித்தார்த் கவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 126 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. #IPL2018 #SRHvRR #RRvSRH #VivoIPL

Similar News