செய்திகள்

பிரபலங்கள் வரிசையில் விராட் கோலிக்கும் மெழுகு சிலை

Published On 2018-03-28 17:42 IST   |   Update On 2018-03-28 17:42:00 IST
டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபலங்களுடன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்படுகிறது. #viratkholi #MadameTussaudsDelhi
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. விராட் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை கண்டுள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் 2013-ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரின் வெற்றிகளை பாராட்டும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிலை அமைப்பதற்காக விராட் கோலியின் உடல் அளவுகள் எடுக்கப்பட்டுள்ளன.



இதுகுறித்து பேசிய விராட் கோலி, 'மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்க உள்ளது எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம். இத்தகைய வாழ்நாள் நினைவுச்சின்னம் வழங்கிய மேடம் துசாட்ஸ் குழுவிற்கு நன்றி' எனக்குறிப்பிட்டிருந்தார்.

மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின், கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ ஆகியோரின் மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #viratkholi #MadameTussaudsDelhi

Similar News