ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2018 சீசனுக்காக அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு

Published On 2018-03-13 18:03 IST   |   Update On 2018-03-13 18:03:00 IST
ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் 2018 சீசனுக்காக அதிகாரப்பூர்வ பாடலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. #IPL2018 #CSK #MI
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்துள்ளது. 10 வருடங்களை சிறப்பாக முடித்துள்ள ஐபிஎல், இந்த வருடத்தில் 11-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. ஐபிஎல் சீசன் 11 ஏப்ரல் 7-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த சீசனுக்கான அதிகாரப்பூர்வ பாடலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பிசிசிஐ மற்றும் ஸ்டார் இந்தியா இரண்டும் இணைந்து இந்த பாடலை உருவாக்கியுள்ளது. இதற்கு BEST vs BEST என பெயரிடப்பட்டுள்ளது. டிவி, ரேடியோ மற்றும் டிஜிட்டல் ஆகியவற்று ஏற்றவகையில் இந்தி, தமிழ், பெங்காலி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்க இயக்குனர் டான் மேஸ் இயக்க, ராஜீவ் வி. பல்லா இசையமைக்க சித்தார்த் பஸ்ருர் ஐந்து மொழிகளில் பாடியுள்ளார்.

Similar News