செய்திகள்

ஓய்விற்கான எந்த காரணமும் இல்லை: வருத்தத்தில் மலிங்கா

Published On 2017-12-30 16:00 IST   |   Update On 2017-12-30 16:00:00 IST
ஓய்வு எதற்காக கொடுக்கப்பட்டது என்று தனக்கு தெரியவில்லை என்று இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் மலிங்கா கருத்து தெரிவித்துள்ளார். #TeamSrilanka #LasithMalinga
இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா கடந்த செப்டம்பர் மாதம் கடைசியாக சர்வதேச போட்டியில் விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை.

இந்தியாவிற்கு எதிரான தொடரின்போது மலிங்கா இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை. அடுத்த மாதம் இலங்கை அணி வங்காள தேசம் செல்கிறது. அப்போது மலிங்கா முக்கிய பந்து வீச்சாளராக இருப்பார். இதனால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

இதுகுறித்து மலிங்கா கிரிக்கெட் போட்டிக்கான இணைய தளத்தில் கூறுகையில் ‘‘இலங்கை அணி என்னை தேர்வு செய்தால் நான் விளையாட தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று தெரியவில்லை. காரணத்தை அறிய நான் இன்னும் காத்திருக்கிறேன்.



பொதுவாக 25 அல்லது 26 வயதில் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு தேவை. ஏனெனில் அவர்கள் இன்னும் ஏராளமான வருடம் விளையாட வேண்டியிருக்கும். ஆனால், என்னைப் போன்ற வயதில் உள்ளவர்களுக்கு?. எனக்கு ஓய்வு கொடுப்பதற்கான எந்த காரணமும் இல்லை.

நான் இன்னும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் தான் விளையாட முடியும். ஆனால், நீங்கள் ஓய்வு கொடுத்தால், கிரிக்கெட விளையாடுவது கடினம்’’ என்றார்.

Similar News