செய்திகள்

பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Published On 2017-12-26 06:28 IST   |   Update On 2017-12-26 14:21:00 IST
மெல்போர்னில் இன்று தொடங்கிய ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. ஆஷஸ் தொடரில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, பாக்சிங் டே டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கி உள்ளது.

முதல் மூன்று போட்டிகளிலும் தனது வேகப்பந்து வீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த மிட்செல் ஸ்டார்க் வலது காலின் குதிக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டார்க்கிற்குப் பதிலாக ஜாக்சன் பேர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.



இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி:  டேவிட் வார்னர், கேமரான் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஷான் மார்ஷ், மிட்செல்  மார்ஷ், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லயோன், ஜாக்சன் பேர்ட்.

இங்கிலாந்து அணி: அலைஸ்டர் குக், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மாலன், மொயீன் அலி, ஜோனி பெர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், ஸ்டுவார்ட் பிராட், ஜிம்மி ஆண்டர்சன், டாம் கியூரன்.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரான் பான்கிராப்ட்டும், டேவிட் வார்னரும் களமிறங்கியுள்ளனர். சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News