செய்திகள்
ஆஷஸ் தொடர்: 6 இன்னிங்சில் 5 முறை மொயீன் அலியை வீழ்த்திய நாதன் லயன்
ஆஷஸ் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 3 டெஸ்டில் 5 முறை மொயீன் அலியை நாதன் லயன் வீழ்த்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ள நிலையில், 3-வது போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
இந்த டெஸ்டில் ஒரு வேடிக்கை என்னவெனில், இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயீன் அலி மூன்று போட்டிகளில் 6 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். இதில் 5 முறை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார்.
பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் மொயீன் அலி 38. 40 ரன்களும், அடிலெய்டில் நடைபெற்ற பகல் - இரவு டெஸ்ட் ஆட்டததில் 25, 2 ரன்களும், தற்போது பெர்த்தி்ல் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 11 ரன்கள் எடுத்து லயன் பந்தில் ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்சில் ரன்ஏதும் எடுக்காமல் கம்மின்ஸ் ஆட்டமிழந்தார்.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சுக்கு மொயீன் அலி திணறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.