செய்திகள்

40 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என நினைத்தோம்: இந்தியாவை நிலைகுலையச் செய்த லக்மல் சொல்கிறார்

Published On 2017-12-11 06:11 GMT   |   Update On 2017-12-11 06:12 GMT
29 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்த இந்தியா, 40 ரன்னுக்குள் சுருண்டு விடும் என நினைத்தோம் என ஆட்ட நாயகன் வீரர் லக்மல் கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா, இலங்கையில் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 112 ரன்னில் சுருண்டது.



இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மல் தொடர்ச்சியாக 10 ஓவர்கள் வீசி 4 மெய்டன் ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.



ஆட்ட நாயகன் விருது பெற்ற லக்மல், இந்தியா 40 ரன்னுக்குள் சுருண்டு விடும் என்று நினைத்தோம் என கூறியுள்ளார். இதுகுறித்து லக்மல் கூறுகையில் ‘‘இந்தியா ஒரு கட்டத்தில் 29 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்திருந்தது. அப்போது நாங்கள் அவர்களை 40 ரன்னுக்குள் சுருட்டி விடுவோம் என்று நினைத்தோம். ஆனால், டோனி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார்.



அவரை மட்டும் விரைவில் வெளியேற்றியிருந்தால், நாங்கள் இந்தியாவை மோசமான ரன்னுக்குள் சுருட்டியிருப்போம். டோனி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். இதற்கு முன் இதுபோன்ற சூழ்நிலையில் அவர் விளையாடியுள்ளார். எங்களுடைய எண்ணம் போட்டியில் வெற்றி பெறுவதுதான். முதல் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து நாங்கள் பெரிய அளவில் நினைக்கவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News