செய்திகள்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறித்து ருசிகர விவாதம்

Published On 2017-11-30 10:33 IST   |   Update On 2017-11-30 10:33:00 IST
மத்தியபிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர்பான புகைப்படங்களை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், சக வீரர் விஜய் சங்கருடன் மத்தியபிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்றார்.

அங்கு பாதுகாப்பு வாகனத்தில் பயணித்து புலிகளை பார்த்து ரசித்தனர். அது தொடர்பான புகைப்படங்களை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

இதில் பாதி கடித்த ஆப்பிளுடன் அவர் இருப்பது போன்ற ஒரு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதற்கு நிறைய பேர் ‘லைக்’ கொடுத்துள்ளனர். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் தனது டுவிட்டரில், ‘புலிகள் சரணாலயத்தில் நீங்கள் நேரத்தை செலவிட்ட விதத்தை பார்க்க பயங்கரமாக இருக்கிறது.

ஆனால் உங்களது கையில் இருப்பது தான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது ஆரோக்கியமான ஆப்பிளா அல்லது மெதுவடையா? என்று கேட்டுள்ளார். அதற்கு அஸ்வின் அது வடை அல்ல என்று ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

Similar News