செய்திகள்

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டாரா?: கிரிக்கெட் வாரியம் மறுப்பு

Published On 2017-11-29 04:04 GMT   |   Update On 2017-11-29 04:04 GMT
இங்கிலாந்து அணியை பலப்படுத்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவசரமாக அழைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்தன.
லண்டன் :

ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியை பலப்படுத்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவசரமாக அழைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் அணியுடன் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் விளையாட்டு உபகரண உடைமைகளுடன் அவர் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியானது.

இந்த நிலையில் இந்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று திட்டவட்டமாக மறுத்து விட்டது. ஸ்டோக்ஸ், தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட தனிப்பட்ட பயணமாக நியூசிலாந்துக்கு கிளம்பியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ், இரவு விடுதியில் குடித்து விட்டு வாலிபரை தாக்கிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் அவரை அணியில் இருந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே விடுவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News