செய்திகள்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ரிது போகத் வெள்ளி வென்றார்

Published On 2017-11-25 16:46 IST   |   Update On 2017-11-25 16:46:00 IST
23 வயதிற்கு உட்பட்டோருக்கான சீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை ரிது போகத் வெள்ளி பதக்கம் வென்றார்.
போலந்தில் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான சீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை ரிது போகத் கலந்து கொண்டார்.

ரிது போகத் இறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை டெமிர்ஹானை எதிர்கொண்டார். துருக்கி வீராங்கனையிடம் தோல்வியடைந்து தங்கப் பதக்கத்தை இழந்த ரிது போகத், வெள்ளி பதக்கத்தைப் பெற்றார். ரிது போகத் கடந்த வருடம் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



ரிது போகத் காலிறுதியில் பல்கேரிய வீராங்கனை செலிஷ்காவையும், அரையிறுதியில் சீன வீராங்கனை ஜியாங் ஷுவையும் தோற்கடித்தார். ரிது ஏற்கனவே இந்த வருடத்தில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும், ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார்.

Similar News