செய்திகள்

17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணம்

Published On 2017-11-20 15:59 IST   |   Update On 2017-11-20 15:59:00 IST
17 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 49.
செக்குடியரசு நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான இவர், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

49 வயதான இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பெண்கள் டென்னிஸ் அசோசியேசன் செய்தி வெளியிட்டுள்ளது.



இரட்டையர் பிரிவில் கொடிகட்டிப் பறந்த ஜனா நோவோட்னா 1998-ம் நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இரட்டையர் பிரவில் 12 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அவர், நான்கு முறை விம்பிள்டன் பட்டத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Similar News