செய்திகள்
அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஜோ ரூட்.

தொடர்ந்து 12-வது அரைசதம் அடித்து உலக சாதனையை சமன் செய்தார், ஜோ ரூட்

Published On 2017-08-26 09:06 IST   |   Update On 2017-08-26 09:06:00 IST
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 12 டெஸ்டுகளில் அரைசதம் அடித்த டிவில்லியர்சின் (தென்ஆப்பிரிக்கா) உலக சாதனையை சமன் செய்தார்.
ஹெட்டிங்லே :

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேயில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் (11 ரன்) உள்பட 4 முன்னணி வீரர்கள் ஸ்கோர் 71 ரன்களை எட்டுவதற்குள் நடையை கட்டினர். இதன் பின்னர் ஜோ ரூட்டும், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும் அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து ஓரளவு மீட்டனர். ஜோ ரூட் 59 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவர் தொடர்ச்சியாக 12 டெஸ்டுகளில் ஏதாவது ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து இருக்கிறார்.

இதன் மூலம் தொடர்ந்து 12 டெஸ்டுகளில் அரைசதம் அடித்த டிவில்லியர்சின் (தென்ஆப்பிரிக்கா) உலக சாதனையை சமன் செய்தார். மறுமுனையில் 6-வது சதத்தை நிறைவு செய்த பென் ஸ்டோக்ஸ் 100 ரன்களில் கேட்ச் ஆனார்.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமார் ரோச், கேப்ரியல் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது.

Similar News