செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி: அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கிய பாகிஸ்தான்

Published On 2017-06-19 12:14 GMT   |   Update On 2017-06-19 12:14 GMT
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி ‘கணிக்க முடியாத அணி’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி இருக்கிறது பாகிஸ்தான்.
சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இதையும் மீறினால் நியூசிலாந்துக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள், கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் என அனைவரும் கணித்தனர்.

டாப்-8 அணிகள் பங்கேற்ற இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் தர வரிசையில் 8-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் மீது யாரும் துளியும் ‘கவனம்’ செலுத்தவில்லை.



அதற்கு ஏற்றார்போல்தான் அந்த அணியின் முதல் லீக் (இந்தியாவுடன் படுதோல்வி) அமைந்தது. அதன் பிறகு எழுச்சி கண்ட பாகிஸ்தான் அணி, வரிசையாக தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளை புரட்டியெடுத்ததுடன் நேற்றைய இறுதிப் போட்டியில் இந்தியாவையும் மூழ்கடித்து விட்டது.

இதன் மூலம் அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி சாம்பியன்ஸ் பட்டம் வென்று வீறுநடை போட்டுள்ளது.
Tags:    

Similar News