செய்திகள்

இலங்கைக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து மில்லர் நீக்கம்

Published On 2017-02-02 20:28 IST   |   Update On 2017-02-02 20:28:00 IST
காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டேவிட் மில்லர் நீக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு டேவிட் மில்லரின் சதமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர் 98 பந்தில் 117 ரன்கள் குவித்ததன் மூலம் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் சேர்த்தது.

பின்னர் இலங்கை பேட்டிங் செய்யும்போது 9-வது ஓவரில் பீல்டிங் செய்ய மில்லரின் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக வெளியேறினார். தற்போது காயத்திற்கு தையல் போட இருக்கிறார். தையல் போட்டால் 10 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். ஆகையால் இலங்கை அணிக்கெதிரான எஞ்சிய மூன்று போட்டிகளில் இருந்து மில்லர் நீக்கப்பட்டுள்ளார்.

Similar News