செய்திகள்

ஜூனியர் உலகக் கோப்பை: ஜெர்மனியை வீழ்த்தி பெல்ஜியம் இறுதிப் போட்டிக்கு தகுதி

Published On 2016-12-16 18:14 IST   |   Update On 2016-12-16 18:14:00 IST
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனியை சூட் அவுட் முறையில் வீழ்த்தி பெல்ஜியம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது.

ஆட்ட நேரம் முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பெல்ஜியம் 4-3 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடக்கும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் பெல்ஜியம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (18-ந்தேதி) நடக்கிறது.

Similar News