செய்திகள்

கவாஸ்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா?

Published On 2016-12-15 07:03 GMT   |   Update On 2016-12-15 07:03 GMT
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவாஸ்கர் 774 ரன் குவித்ததே சாதனையாக இருக்கிறது. அதை விராட் கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 4 டெஸ்டில் விளையாடி 640 ரன் (7 இன்னிங்ஸ்) குவித்துள்ளார்.

2 ஆட்டத்தில் ‘அவுட்’ ஆகாததால் அவரது சராசரி 128 ஆக உள்ளது. அதிகபட்சமாக மும்பை டெஸ்டில் 235 ரன் குவித்தார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 1971-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் கவாஸ்கர் 774 ரன் குவித்ததே சாதனையாக இருக்கிறது. அதை விராட் கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு 137 ரன் தேவை. சென்னை டெஸ்டில் இந்த ரன்னை குவித்தால் அவர் கவாஸ்கர் சாதனையை முறியடிப்பார்.

Similar News