செய்திகள்

சேப்பாக்கம் ஆடுகளத்தை உலர வைக்க நிலக்கரி தணல்

Published On 2016-12-15 08:53 IST   |   Update On 2016-12-15 08:54:00 IST
இரு தினங்களாக நல்ல வெயில் அடித்ததால் சேப்பாக்கம் ஆடுகளத்தை தயார் செய்யும் இறுதிகட்ட பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
புயல், மழை எதிரொலியாக சேப்பாக்கம் ஆடுகளம் (பிட்ச்) தார்ப்பாயால் மூடி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இரு தினங்களாக நல்ல வெயில் அடித்ததால் ஆடுகளத்தை தயார் செய்யும் இறுதிகட்ட பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மழையால் ஆடுகளத்தில் பாதிப்பு இல்லாவிட்டாலும், ஈரப்பதம் அதிகம் இருந்தது. ஈரப்பதத்தை உலர்த்த பிட்ச் பராமரிப்பாளர்கள் பழங்கால யுக்தியை கையாண்டார்கள். அதன்படி நிலக்கரி எரிக்கப்பட்டு அதன் நெருப்பு தணலை இரும்பு பெட்டிகளில் வைத்து (சலவைபெட்டி போல) அதனை ஆடுகளத்தின் மேல்வாக்கில் காட்டி உலர வைத்தனர்.

இந்த வித்தியாசமான அணுகுமுறையை பார்த்து ஆச்சரியப்பட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், டி.வி. வர்ணனையாளருமான நாசர் உசேன் இந்த காட்சியை டுவிட்டரில் படத்துடன் பதிவு செய்து இருக்கிறார்.

Similar News