செய்திகள்

ரோகித் சர்மா காயத்துடன் ஆடியபோது டோனி அனுப்பிய மெசேஜ் என்ன?

Published On 2016-10-30 15:32 IST   |   Update On 2016-10-30 15:32:00 IST
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா காயத்துடன் ஆடியபோது தான் அனுப்பிய மெசேஜ் என்ன? என்பதை டோனி கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 269 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 79 ரன்னில் சுருண்டது. இந்திய அணியில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 65 பந்தில் 70 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும், டோனி 41 ரன்களும் எடுத்தனர்.

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க மிகவும் திணறினார்கள். ரோகித் சர்மா விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் விராட் கோலியுடன் இணைந்து இரண்டு ரன்கள் ஓட மிகவும் சிரமப்பட்டார்.

இதனால் ரோகித் சர்மா ‘ரிட்டையர்டு ஹர்ட்’ மூலம் வெளியேறலாம் என்ற நிலைமை இருந்தது. ரோகித் சர்மா வெளியேறிவிட்டால் இந்திய அணிக்கு கடினமாகிவிடும் என்று டோனி உணர்ந்தார்.

இதனால் அவருக்கு டோனி ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் ‘‘உங்களால் தொடர்ந்து விளையாட முடியாது என்று நீங்கள் கருதினால், உங்களது வழக்கான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்’’ கூறியிருந்தார்.

ஏன் அப்படி கூறினேன் என்று பரிசளிப்பு விழாவின்போது டோனி விளக்கம் அளித்தார். அதில் ‘‘ஒரு சமயம் விராட் கோலி அவுட்டாகியிருந்தால் நமக்கு மிகவும் கடினமாகிவிடும். அப்போது ரோகித் சர்மாவின் ஆட்டம் நமக்கு கைக்கொடுக்கும். இதனால்தான் அப்படி கூறினேன்.

இந்த ஆடுகளத்தில் எளிதாக வீரர்கள் பேட்டிங் செய்ய அடிக்கடி மாறுவது (Rotate Strike) கடினம் என்று நாங்கள் உணர்ந்தோம். இதனால் அதிரடியாக விளையாடி முடிவு செய்தோம். 270 என்பது நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். அதே வேளையில் பனியிd; தாக்கம் குறித்த விஷயத்தையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது’’ என்றார்.

டோனியின் அறிவுரையின்படி அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 65 பந்தில் 70 ரன்கள் சேர்த்தார்.

Similar News