செய்திகள்

காயம் அடைந்தும் மனம் தளராமல் 5000 மீட்டர் தூரத்தை கடந்த அமெரிக்க வீராங்கனை

Published On 2016-08-16 16:36 GMT   |   Update On 2016-08-16 16:36 GMT
ரியோ ஒலிம்பிக்கில் 5000 மீ்ட்டர் தூர ஓட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க பெண்மணி காயம் அடைந்த பின்னரும் பந்தய தூரத்தை கஷ்டப்பட்டு கடந்தார்.
ரியோவில் இன்று பெண்களுக்கான 5000 மீட்டர் தூர ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதன் 2-வது அரையிறுதியில் அமெரிக்காவின் அப்பே டி'அகோஷ்டினோ, நியூசிலாந்தின் நிக்கி ஹம்ப்ளின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் மும்முரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இருவரும் திடீரென எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டார்கள். இதில் அமெரிக்க வீராங்கனையின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.


இதனால் மனமுடைந்த நியூசிலாந்து வீராங்கனை அவரை அருகில் சென்று நலம் விசாரித்தார். போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் ஒதுங்கி்க் கொள்ளுங்கள் என்றார். ஆனால், அமெரிக்க வீராங்கனை அதற்கு மறுத்து விட்டார்.



தன் மனவலிமையால் எழுந்து மீண்டும் ஓடினார். ஆனால் சில மீட்டர் தூரம் சென்றதும் மீண்டும் கிழே விழுந்தார். இதனால் நியூசிலாந்து வீராங்கனை மனமுடைந்தார். திரும்பவும் அமெரிக்க வீராங்கனையிடம் வந்து ஆறுதல் கூறினார்.

இறுதியில் ஒரு வழியாக 5000 மீட்டரை கடந்தார் அமெரிக்க வீராங்கனை. பின்னர் அவரால் நடக்க முடியாமல் திணறியதால் வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்டார்.


நியூசிலாந்து வீராங்கனை 15-வது நபராக வந்து அமெரிக்க வீராங்கனைக்காக காத்திருந்தார். 16-வதாக வந்த பின்னர் அவரை கட்டிப்பிடித்து தனது ஆறுதல் மற்றும் வருத்தத்தை தெரிவித்தார்.

Similar News