செய்திகள்
ரியோ 100 மீ ஓட்டம்: காட்லினுக்கு எதிராக குரல் எழுப்பிய ரசிகர்கள்
ரியோ ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் காட்லின் 2-வது இடம் பிடித்தார். இவருக்கு எதிராக ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள்.
உலகத்தின் அதிவேக வீரர் யார் என்பதை நிரூபிக்கக் கூடிய 100 மீ்ட்டர் ஓட்டப் பந்தயம் இன்று அதிகாலை ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர் காட்லின் மற்றும் உசைன் போல்ட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
உசைன் போல்டை எப்படியாவது தோற்கடித்து விடவேண்டும் என்ற காட்லின் போராடி வருகிறார். ஆனால் முடிந்த பாடில்லை. இந்த வெறி போட்டியை விட்டு வெளியேயும் நடக்கிறது. இதனால் இவரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இருவரும் இன்றும் ஓட்டப்பந்தயத்தில் மோதிக் கொண்டார்கள். சுமார் 80 மீட்டர் வரை காட்லின்தான் முன்னணியில் இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் உசைன் போல்ட் முதலிடம் பெற்றார். கடந்த 2008-ல் இருந்து போல்டை யாரும் தோற்கடிக்க முடியவில்லை.
இந்த போட்டி முடிந்த பின்னர், மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள், காட்லின் இரண்டு முறை போதை பொருள் அருந்தி தடை பெற்றவர் என்று கூறி எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினார்கள். இது அவரை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
ரசிகர்களின் செயல்பாடு குறித்து காட்லின் கூறுகையில் ‘‘நாம் ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். அதேபோல் ரசிகர்களும் ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுப்பதை பார்க்க விரும்புகிறேன்.
நான் உசைன் போல்ட் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். போட்டிக்கு வெளியேயும் அவர் ஒரு சிறந்த மனிதன். மிகவும் சாந்தமானவர். எங்கள் இருவருக்கும் இடையில் பகைமை கிடையாது. அங்கே கெட்ட ரத்தம் ஏதும் கிடையாது. நான் ஒரு போட்டியாளர். அவரும் ஒரு போட்டியாளர். அவர் இன்று என்னை தோற்கடித்துள்ளார். இதேதான் அவரும் என்னைப் பற்றி சொல்வார் என்று நம்புகிறேன்.’’ என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘இது ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு முன் நான் கேட்டதும் கிடையாது. இதுபோன்று பார்த்ததும் கிடையாது’’ என்றார்.