செய்திகள்
ரியோ ஒலிம்பிக்: கடும் போராட்டத்திற்குப் பின் சாய்னா நேவால் வெளியேற்றம்
ரியோ ஒலிம்பிக்கில் நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவால் 0-2 என நேர்செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான தனிநபர் பேட்மிண்டன் லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்திருந்தார். இவருடன் இதே பிரிவில் இரண்டு வீராங்கனைகள் இடம்பிடித்திருந்தனர்.
முதல் இடத்தை பிடிக்கும் வீராங்கனை அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், 11-ந்தேதி நடைபெற்ற முதல் சுற்றில் பிரேசில் வீராங்கனையை சாய்னா நேவால் தோற்கடித்தார்.
இன்று உக்ரைன் வீராங்கனை மரியா யுட்டிலினாவுடன் மோதினார். தொடக்கத்தில் சாய்னா நேவால் சிறப்பாக செயல்பட்டார். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் சாய்னா 7-3 என முன்னிலை பெற்றர். அதன்பின் உக்ரைன் வீராங்கனை தொடர்ச்சியாக புள்ளிகள் பெற 8-8 போட்டி என சமநிலை அடைந்தது. பின்னர் 15- 15 சமநிலையில் சென்றது. இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். 17-17 என சமநிலையில் சென்ற பின்னர், 18-20 என பின்தங்கிய சாய்னா அந்த செட்டை 18-21 என இழந்தார்.
2-வது செட்டும் கடுமையாக சென்றது. 16- 15 என சாய்னா முன்னிலையில் இருந்தார். அதன்பின் சாய்னா பின்தங்க உக்ரைன் வீராங்கனை 21- 19 என வெற்றி பெற்றார். இதனால் சாய்னா 0-2 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஏற்கனவே மரியா முதல் சுற்றில் பிரேசில் வீராங்கனையை தோற்கடித்ததால் ‘ஜி’ பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.