செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: பச்சையாக மாறிய டைவிங் நீச்சல் குளம்

Published On 2016-08-14 17:25 IST   |   Update On 2016-08-14 17:25:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் டைவிங் நீச்சல் குளத்தின் நிறம் திடீரென பச்சையாக மாறியது. இதற்கு அமைப்பாளர்கள் விளக்கம் அளித்தனர்.
பிரேசில் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டைவிங் பிரிவிற்கென தனியாக நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் நீளம் கலரில் இருந்த தண்ணீர் திடீரென பச்சை கலராக மாறியது. இதனால் வீரர்கள் களக்கம் அடைந்தனர். ஏற்கனவே, ரியோ ஒலிம்பிக் நகரம் சரியாக இல்லை என்று வீரர்கள் குற்றம்சாட்டிய நிலையில் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டைவிட் போட்டி நடக்கும் இடத்திற்கான மானேஜர் உரிய விளக்கம் அளித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கடந்த ஐந்தாம் தேதி ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்றது. இதற்காக டைவிங் போட்டி நடக்கும் நீச்சல் குளத்தில் 80 லீட்டர் ஹைட்ரஜன் பெராக்சைடு கலக்கப்பட்டது.

இந்த ஹைட்ரஜன் பெரோக்சைடு, நீரில் கலக்கப்பட்ட பாக்டீரியா உயிரிக்கொல்லியான குளோரினை செயலிழக்கச் செய்துள்ளது. இதனால் நீலக் கலர் தண்ணீர் பச்சையாக தோற்றம் அளிக்கிறது. இதுகுறித்து சோதனையும் செய்து விட்டோம். வேறு எந்த பிரச்சினையு்ம் இல்லை.


டைவிங் போட்டிக்கான பயிற்சி குளத்தில் உள்ள தண்ணீரில் எந்த மாற்றமும் இல்லை. ஆகையால் தற்போது அந்த தண்ணீரை போட்டி நடைபெறும் குளத்திற்கு மாற்றி வருகிறோம்’’ என்றார்.

ஏற்கனவே, சைக்கிள் ரேஸிற்கான சாலை வசதி வாய்ந்ததாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News