செய்திகள்
பேட்மின்டன் இரட்டையர் பிரிவு: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி
ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி ஆறுதல் வெற்றி பெற்றது.
பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் இந்திய அணி 2 ஆட்டங்களில் தோற்று ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.
மனு அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி இந்தோனேசியா, சீனா ஜோடிகளிடம் தோற்று இருந்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்த ஜோடி ஜப்பானை சேர்ந்த என்டோ- ஹயாக்வா ஜோடியை எதிர்கொண்டது. இதில் அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி 23-21, 21-11 என்ற கணக்கில் வென்று ஆறுதல் அடைந்தது. இந்த வெற்றியால் எந்த பலனும் இல்லாமல் போனது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி தான் மோதிய 3 போட்டியிலும் தோற்றது. ஒற்றையர் பிரிவில் சானியா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். இவர்கள் மோதும் 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது.