செய்திகள்

கலப்பு இரட்டையர் டென்னிஸ்: அரை இறுதியில் சானியா ஜோடி தோல்வி

Published On 2016-08-14 11:16 IST   |   Update On 2016-08-14 11:16:00 IST
ரியோ ஒலிம்பிக் போட்டியில் சானியா - ரோகன் போபன்னா ஜோடி அரைஇறுதியில் தோற்று ஏமாற்றம் அளித்தது.

ரியோடி ஜெனீரோ:

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா ஜோடி முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு அரை அறுதிக்கு முன்னேறி இருந்தது. நள்ளிரவு நடந்த அரைஇறுதியில் சானியா ஜோடி அமெரிக்காவை சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் - ராஜீவ்ராம் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்ற சானியா ஜோடி அடுத்த செட்களில் மோசமாக விளையாடி தோற்றது.

இந்திய ஜோடி 6-2, 2-6, 3-10 என்ற கணக்கில் தோற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்த தோல்வியால் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வாய்ப்பு உறுதி ஆகவில்லை.

சானியா மிர்சா - போபன்னா ஜோடி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் செக் குடியரசுவை சேர்ந்த லூசி ஹர்டேக்கா- ஸ்டெபானிக் ஜோடியை இன்று சந்திக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

ரியோ ஒலிம்பிக் டென் னிஸ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற முன்னணி வீரரான ரபெல்நடால் ஒற்றையர் அரைஇறுதியில் தோற்றார்.

அவர் அரை இறுதியில் 7-5, 4-6, 6-7 (5-7) என்ற கணக்கில் டெல்போட் ரோவிடம் (அர்ஜென்டினா) தோற்றார். நடால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் நிஷி கோரியுடன் (ஜப்பான்) மோதுகிறார்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து)- டெல்போட்ரோ மோதுகிறார்கள்.

Similar News