செய்திகள்

ஒலிம்பிக் 100 மீட்டர் தகுதிச் சுற்று: உசைன் போல்டை முந்தினார் காட்லின்

Published On 2016-08-13 22:00 IST   |   Update On 2016-08-13 22:00:00 IST
ரியோ ஒலிம்பிக்கின் 100 மீட்டர் ஓட்டப் பந்தய தகுதிச் சுற்றில் 10.01 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து காட்லின் அசத்தினார். உசைன் போல்ட் 10.07 வினாடியில் கடந்தார்.
தடகளத்தின் முக்கிய போட்டியான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர் காட்லின் பந்தய தூரத்தை 10.01 வினாடிகளில் கடந்தார். உசைன் போல்ட் 10.07 வினாடிகளில் கடந்தார்.

தகுதிச் சுற்று 8 ஹீட்டாக (பிரிவு) நடைபெற்றது. ஒவ்வொரு ஹீ்ட்டிலும் தலா 9 வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.

2-வது ஹீட்டில் இடம்பிடித்திருந்த அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 10.01 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதல் இடம் பிடித்தார். ஆன்டிகுவா அண்டு பார்புடா வீரர் டேனியல் பெய்லி 10.20 வினாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்தார்.

7-வது ஹீட்டில் இடம்பிடித்திருந்த உசைன் போல்ட் 10.07 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்துள்ளார். பஹ்ரைன் வீரர் அன்ட்ரீவ் பிஷெர் 10.12 வினாடிகளில் கடந்தார்.

6-வது ஹீட்டில் இடம்பிடித்திருந்த யோஹன் பிளேக் 10.11 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். துருக்கி வீரர் ஹார்வெய் 10.14 வினாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்தார்.

4-வது ஹீட்டில் கனடா வீரர் பந்தய தூரத்தை 10.04 வினாடிகளில் கடந்தார். 5-வது ஹீட்டில் ஐவரி கோஸ்ட் வீரர் 10.03 வினாடிகளில் கடந்தார். காட்லின் உடன் இணைந்து இவர்களும் போல்டிற்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள்.

Similar News