செய்திகள்

25 மீ ரேபிட் ஃபையர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் குர்பிரீத் சிங் ஏமாற்றம்

Published On 2016-08-13 20:03 IST   |   Update On 2016-08-13 20:03:00 IST
ஒலிம்பிக்கில் 25மீ ரேபிட் ஃபையர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் குர்பிரீத் சிங் 7 இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.
ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீ்ட்டர் ரேபிட் ஃபையர் பிஸ்டல் பிரிவில் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குர்பிரீத் சிங் 7-வது இடம் பிடித்தார். முதல் 6 இடங்களை பிடிக்கும் வீரர்கள்தான் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் குர்பிரீத் சிங் போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஜெர்மனி வீரர் 592-27 புள்ளிகள் பெற்று முதல் இடமும், சீன வீரர் 590-27 புள்ளிகள் பெற்று 2-வது இடமும், பிரான்ஸ் வீரர் 586-19 புள்ளிகள் பெற்று 3-வது இடமும் பெற்றனர். இந்திய வீரர் 581-24 புள்ளிகள் பெற்றார்.

Similar News