செய்திகள்

ஒலிம்பிக் குத்துச்சண்டை: கடினமான பிரிவில் இந்திய வீரர்கள்

Published On 2016-08-06 09:16 IST   |   Update On 2016-08-06 09:16:00 IST
ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை அணியில் ஷிவ தபா (56 கிலோ), மனோஜ்குமார் (64 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ‘பை’ வாய்ப்பு மூலம் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட இருந்தாலும் போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது.

22 வயதான ஷிவ தபா, தனது முதல் ஆட்டத்தில் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான கியூபா வீரர் ரோபிஸி ரமிரேசுடன் (ஆக.9-ந்தேதி) பலப்பரீட்சை நடத்துகிறார். ஆசிய விளையாட்டு சாம்பியனான விகாஸ் கிருஷ்ணன், 18 வயதான அமெரிக்காவின் சார்லஸ் கான்வெல்லை (ஆக.10) எதிர்கொள்கிறார். மனோஜ்குமார் தனது சவாலை, லிதுவேனியா வீரர் எவல்டாஸ் பெட்ராவ்ஸ்காசுடன் (ஆக.10) தொடங்குகிறார்.

Similar News