செய்திகள்
ரியோ ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா?
ரியோ ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்புள்ள துப்பாக்கி சுடுதலில் இந்திய முன்னணி வீரர் ஜிதுராய் இன்று களம் குதிக்கிறார்.
ரியோ டி ஜெனீரோ:
31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா, பிரேசில் உள்பட 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 306 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது. முதல் நாளில் வில்வித்தைக்கான ரேங்கிங் சுற்றுகள் மட்டுமே நடந்தன.
2-வது நாளான இன்று (சனிக்கிழமை) தான் பதக்கத்திற்கான போட்டிகள் ஆரம்பிக்கின்றன. இந்த ஒலிம்பிக்கின் முதல் தங்கப்பதக்கம் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வழங்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த பந்தயத்தில் இந்தியா சார்பில் அபூர்வி சன்டிலா, அயோனிகா பால் ஆகியோர் களம் இறங்குகிறார்கள். இந்த பிரிவின் நடப்பு சாம்பியன் சீனாவின் யி சிலிங், முதல் தங்கப்பதக்கத்திற்கு குறி வைத்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி நடக்கிறது. இதில் ராணுவத்தில் பணியாற்றும் இந்திய நட்சத்திர வீரர் ஜிதுராய் அடியெடுத்து வைக்கிறார். காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டி சாம்பியனான 29 வயதான ஜிதுராய் உலக துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 6 பதக்கங்களை வென்றவர். இரு ஆண்டுகளாக சூப்பர் பார்மில் உள்ள அவர், இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைப்பார் என்று ஒட்டுமொத்த தேசமும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.
ஆண்கள் ஆக்கி போட்டியில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜென்டினா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகளும் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் ஸ்ரீஜேஷ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று மோதுகிறது. 36 ஆண்டு கால பதக்க ஏக்கத்தை தணிக்கும் உத்வேகத்தில் உள்ள இந்திய அணி வெற்றியுடன் தொடங்க வேண்டியது அவசியமாகும். இந்த முறை இந்திய அணி சிறந்த முறையில் தயாராகி இருப்பதால், ஆக்கியில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. போட்டியில் கவனம் செலுத்துவதற்காக ஆக்கி வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை.
7-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையுடன் மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் தனது முதல் சவாலை இன்று தொடங்குகிறார்.
மற்ற வீரர்களை காட்டிலும் பெயஸ் மூன்று நாட்கள் தாமதமாக நேற்று முன்தினம் தான் ரியோ வந்து சேர்ந்தார். ரோகன் போபண்ணாவுடன் ஒரே அறையில் தங்குவதை தவிர்க்கவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக சர்ச்சைகள் கிளம்பின. இதை திட்டவட்டமாக மறுத்த 43 வயதான பெயஸ், நியூயார்க்கில் உலக அணிக்காக விளையாடி விட்டு நேராக ரியோவுக்கு புறப்பட்டு வந்ததாக கூறினார். மேலும், தனக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தனி அறை ஒதுக்கப்படவில்லை என்றும் ஏமாற்றம் தெரிவித்தார்.
இந்த சலசலப்புக்கு மத்தியில் லியாண்டர் பெயசும், ரோகன் போபண்ணாவும் இன்று தங்களது இரட்டையர் முதலாவது சுற்றில் போலந்தின் மார்சின் மாட்கவ்ஸ்கி- லுகாஸ் குபோத் இணையை எதிர்கொள்கிறார்கள். ஒலிம்பிக்குக்கு நேரடியாக தகுதி பெறாத பெயஸ், டாப்-10 தரவரிசைக்குள் போபண்ணா வந்ததால், அதன் அடிப்படையில் இந்த அதிர்ஷ்டத்தை பெற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
பெண்கள் இரட்டையர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் இந்தியாவின் சானியா மிர்சா, சக ஜூனியர் மங்கை பிராத்தனா தோம்ப்ரேவுடன் கைகோர்த்துள்ளார். இவர்கள் முதல் சுற்றில் சீனாவின் சூய் பெங்- சூய் ஷாங் ஜோடியுடன் மோதுகிறார்கள். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடக்கிறது.
இதே போல் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு களம் காணும் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியும் (48 கிலோ) நாளை அதிகாலை (3.30 மணி) நடக்க உள்ளது.