செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: ஊக்கமருந்து பயன்படுத்திய அயர்லாந்து குத்துச் சண்டை வீரர் சிக்கினார்

Published On 2016-08-05 22:03 IST   |   Update On 2016-08-05 22:05:00 IST
‘ரியோ 2016’ ஒலிம்பிக் தொடர் இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அயர்லாந்து வீரர் சிக்கியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் தொடருக்கு அனைத்து நாட்டு வீரர்- வீராங்கனைகளும் தயாராகி விட்டார்கள். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் ரியோ சென்றிருக்கிறார்கள்.

அந்த அணியில் 23 வயதான குத்துச் சண்டை வீரர் மிக்கேல் ஓ'ரெய்லி மிடில்வெயிட் குத்துச்சண்டை பிரிவில் இடம் பிடித்திருந்தார்.

அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த தகவலை அயர்லாந்து விளையாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதனால் அவர் ரியோ போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யலாம். மேலும், ‘பி’ மாதிரி பரிசோதனையை செய்யச் சொல்லியும் வற்புறுத்தலாம்.

அயர்லாந்து ஊக்க மருந்து தடுப்பு நடவடிக்கை ஒழுங்கு விதிமுறைப்படி விசாரணை மேற்கொள்ளபட்டு முடிவு வரும்வரை போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது. இதனால் ரியோ ஒலிம்பிக்கில் மிக்கேல் ஓ'ரெய்லி கலந்து கொள்ள இயலாது.

மிக்கேல் ஓ'ரெய்லி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News