இந்தியா

சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு: பாஜக-வின் பி-டீம் என்பது நிரூபணம்- ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை விமர்சித்த காங்கிரஸ்

Published On 2025-08-22 15:34 IST   |   Update On 2025-08-22 15:34:00 IST
  • ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநிலத்திற்காக போராடுவது போன்று நடிக்கிறது.
  • பின்னர், டெல்லியில் பிரதமர் மோடியின் முன் அடிபணிகிறது.

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிப்பதன் மூலம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முகத்திரை அகற்றப்பட்டு, பாஜக-வின் பி-டீம் என்பது மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக ஷர்மிளா கூறியதாவது:-

ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநிலத்திற்காக போராடுவது போன்று நடித்துவிட்டு, டெல்லியில் பிரதமர் மோடியின் முன் அடிபணிகிறது. பாஜக எஜெண்டாவிற்கு ஆதரவு தெரிவித்து தெலுங்கு மக்களுக்கு துரோகம் செய்கிறது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முகத்திரை மீண்டும் ஒருமுறை கிழித்தெறியப்பட்டுள்ளது. பாஜக-வின் பி-டீம் என்பதை தவிர மற்றொன்றுமில்லை என்பதை தெளிவாக நிரூபணம் செய்துள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முகமூடி அகற்றப்பட்டுள்ளது. அதன் கீழ் இருந்த காவி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி மோடியின் "வளர்ப்பு மகன்" என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

மாநிலத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. ஆனால் மத்தியில் பாஜக-வின் சேவகனாக செயல்படுகிறது.

இவ்வாறு ஷர்மிளா தெரிவித்தார்.

Tags:    

Similar News