இந்தியா

தேசியவாத காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும் கட்சியா... எதிர்க்கட்சியா.... சபாநாயகர் சொல்வது என்ன?

Published On 2023-07-04 05:39 GMT   |   Update On 2023-07-04 05:39 GMT
  • தேசியவாத கட்சிகள் பிளவுப்பட்டதாக எழுத்துப்பூர்வ தகவல் வரவில்லை
  • தேசியவாத கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டசபையில் அப்படியே இருக்கிறது

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டுள்ளது. சரத் பவார் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரியாக பதவி ஏற்றுள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி எங்களுக்குத்தான் என இருவரும் அடித்துக்கொள்ளவில்லை. ஆனால், பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்துதான் அடுத்த கட்ட நகர்வு இருக்கும். மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சியாக தேசியவாத காங்கிரஸ் இருந்து வருகிறது. தற்போது தன்பக்கம் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என அஜித் பவார் கூறியுள்ளதால் அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாக கருதப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியா? அல்லது எதிர்க்கட்சியா? என்பது குறித்து நான் இன்னும் உறுதி செய்யவில்லை. எனக்கு முன்னால் இருக்கும் விவரங்களை பார்த்துவிட்டு, அதுகுறித்து முடிவு எடுப்பேன்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ஜெயந்த் பாட்டீலிடம் இருந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரேயொரு மனுவை மட்டுமே நான் பெற்றுள்ளேன். எழுத்துப்பூர்வமாக மற்ற தலைவர்களிடம் இருந்து தகவல் பெறப்படவில்லை. கட்சி பிளவுப்பட்டதாக எந்தவொரு தகவலும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.

அஜித் பவாருக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் உள்ளதாக தகவல் வெளியாகுவது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள். அதைப்பற்றி எனக்கு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. ஏனென்றால் எழுத்துப்பூர்வமாக எனக்கு வரவில்லை. கட்சி சார்பில் சட்டமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும் '' என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்து எம்.எல்.ஏ.க்கள் மூலம் சபாநாயகர் அலுவலகம் கடிதங்களை பெற்றுள்ளது. சட்டப்பூர்வமாக அவற்றை ஆராய்ந்து, அதன்பின் முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

Tags:    

Similar News