இந்தியா

மந்திரி சிவன்குட்டி

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி- மந்திரி சிவன்குட்டி தகவல்

Published On 2022-07-31 08:21 GMT   |   Update On 2022-07-31 08:21 GMT
  • புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்படும்.
  • பள்ளிகளில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கையை மாநில அரசு எடுத்துள்ளது.

திருவனந்தபுரம்:

புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என கேரளாவில் சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி கூறுகையில், பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மறுசீரமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும்.

புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்படும். பாடத்திட்டத்தில் தலைப்பைச் சேர்ப்பது மிகவும் முக்கியம். தற்போது, ​​பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்காததால், பல பிரச்னைகள் காணப்படுகின்றன.

பள்ளிகளில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கையை மாநில அரசு எடுத்துள்ளது. ஆனால் அதை வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது. இந்த இயக்கத்தில் மற்ற பிறரின் முடிவு மிகவும் முக்கியமானது என்றார்.

Tags:    

Similar News