மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 15பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.