இந்தியா
null

இன்வைட்-லும் ஆடம்பரம்: வைரலாகும் ஆனந்த் அம்பானி திருமண அழைப்பிதழ் வீடியோ

Published On 2024-06-28 10:51 IST   |   Update On 2024-06-28 11:06:00 IST
  • திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி உலகின் பல்வேறு இடங்களில் நடந்தது.
  • அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ் எக்ஸ் தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி உலகின் பல்வேறு இடங்களில் நடந்தது.


இந்நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நாள் நெருங்கி வரும் நிலையில், ஆடம்பரமான திருமண அழைப்பிதழ் இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆடம்பரமான அழைப்பிதழ், ஒரு கோவிலை ஒத்த ஒரு பெட்டி, அதை திறந்த உடன் உள்ளே விவரங்கள் மற்றும் தெய்வீக உருவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பிதழை திறந்தவுடன் அதில் மங்களகர இசை ஒலிக்கிறது.

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ் எக்ஸ் தளத்தில் வேகமாக பரவி வருகிறது.




Similar News