இந்தியா

மக்களவை, சட்டபேரவை தேர்தல் நடத்த தயாராக உள்ளோம்- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

Published On 2024-03-13 11:30 GMT   |   Update On 2024-03-13 11:45 GMT
  • சர்வதேச எல்லைகள் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.
  • ஜம்மு காஷ்மீரில் 86.9 லட்சம் வாக்களார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஜம்மு காஷ்மீரில் ஆய்வு நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைகள் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.

ஜம்மு காஷ்மீரில் மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவருக்கும் சமமான மற்றும் போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜம்மு காஷ்மீரில் 86.9 லட்சம் வாக்களார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயம் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும்.

எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News