இந்தியா

வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ராஜினாமா ஏற்பு

Published On 2024-09-10 10:36 IST   |   Update On 2024-09-10 10:36:00 IST
  • அரியானா சட்டசபை தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் கட்சி சீட் வழங்கி உள்ளது.
  • ஆளும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றி, காங்கிரசை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்- வீராங்கனைகளில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் சமீபத்தில் காங்கிரசில் முறைப்படி தங்களை இணைத்துக்கொண்டனர். இதனையடுத்து தாங்கள் ரெயில்வே துறையில் பணியாற்றி வந்த பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில், விளையாட்டு ஒதுக்கீட்டில் சிறப்புப் பணி அதிகாரிகளாக பணியாற்றி வந்த வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்பதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதனிடையே அரியானா சட்டசபை தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் கட்சி சீட் வழங்கி உள்ளது. ராஜினாமாவை தொடர்ந்து வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் அரியானா சட்டசபை தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்யும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும், ஆளும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றி, காங்கிரசைஆட்சியில் அமர்த்த பாடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Similar News