VIDEO: மின் கம்பியில் நடந்து சாகசம் செய்த ஆடு... சூப்பர் மேன் தங்கச்சி என நெட்டிசன்கள் கிண்டல்
- மெதுவாக நடந்து சென்று மின்கம்பியில் படர்ந்து இருந்த தழையை சாப்பிட்டது.
- சூப்பர் மேன் தங்கை என சமூக வலைதளத்தில் வைரல்.
திருப்பதி:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மின் கம்பியில் தாவரம் ஒன்று படர்ந்து வளர்ந்திருந்தது. இதனை கண்ட ஆடு ஒன்று அதனை சாப்பிட முடிவு செய்தது. அப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஆடு ஏறியது. பின்னர் கட்டிடத்திலிருந்து மின்சார கம்பிக்கு சென்றது.
2 மின்சார கம்பிகளில் தனது கால்களை வைத்து சாகசம் செய்தபடி மெதுவாக நடந்து சென்று மின்கம்பியில் படர்ந்து இருந்த தழையை சாப்பிட்டது.
இதனைக் கண்ட பொதுமக்கள் ஆடு செய்யும் சாகசங்களை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் பல்வேறு பதிவுகளை செய்து வருகின்றனர்.
இந்த ஆடு எப்படி மின்சார கம்பியில் ஏறியது மற்ற ஆடுகளை போல் அல்லாமல் சூப்பர் மேன் தங்கை. இதனை பார்க்கும் போது எனது இதயம் நடுங்குகிறது. மின்சாரம் தாக்கி ஆடு கீழே விழுமோ என அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த ஆடு சாதாரண ஆடு இல்லை ஸ்பைடர் மேன் ஆடு எனவும், இது குரங்கா அல்லது சர்க்கசில் இருந்து தப்பி வந்த விலங்கா, ஆடுகள் பொதுவாக தரையில் தான் புல் மேயும் இந்த ஆடு மின்சாரக் கம்பியில் உள்ளே தேடி சென்றுள்ளது என கிண்டலாக பதிவிட்டு உள்ளனர்.
மின்சாரத்துறை அதிகாரிகள் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்