இந்தியா

30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்!

Published On 2025-04-12 14:08 IST   |   Update On 2025-04-12 14:08:00 IST
  • UPI சேவைகளில் காலை 11:30 மணியளவில் சிக்கல் தொடங்கியது.
  • NPCI அவ்வப்போது தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது.

இந்தியா முழுவதும் பல இடங்களில் UPI சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் பயனர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்த முடியவில்லை. பயனர்கள் பணத்தை மாற்றவோ அல்லது தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கவோ முடியவில்லை என்று புகார் கூறுகின்றனர்.

சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, UPI  சேவைகளில் காலை 11:30 மணியளவில் சிக்கல் தொடங்கியது.

இந்த UPI சிக்கல்கள் குறித்து நண்பகல் வரை சுமார் 1,168 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், Google Pay பயனர்கள் 96 சிக்கல்களைப் புகாரளித்தனர், அதே நேரத்தில் Paytm பயனர்கள் 23 சிக்கல்களைக் குறிப்பிட்டனர்.

சமூக ஊடக தளங்களிலும் இந்தப் பிரச்சினை குறித்து பலர் புகார் செய்யத் தொடங்கியுள்ளனர். சமீபக காலமாக UPI சேவைகளில் அடிக்கடி முடக்கம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 30 நாளில் இது மூன்றாவது முடக்கம் ஆகும்.

இந்நிலையில் UPI செயல்பாடுகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "NPCI தற்சமயம் அவ்வப்போது தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது.

இதனால் பகுதி UPI பரிவர்த்தனை நிராகரிப்பு ஏற்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் உங்களுக்கு இது குறித்து தொடர்ந்து அறிவிப்போம். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News